Sunday, 13 December 2015

9, திருப்புகழ் -7. திருவாமூர்.




9. திருப்புகழ் -7. திருவாமூர்



திருவாமூர் திருக்கோயில். படம் : தினமலர். நன்றி.


அருணகிரிநாதர் தரிசித்த 5வது தலம் திருவாமூர்.  இது அப்பர் ஸ்வாமிகள் அவதரித்த பூமி.







ஆனால் அவர் இத்தலத்தைப் பற்றி ஒரு பதிகம் கூடப் பாடவில்லை! அவர் பாடிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து ஸ்வாமியைப் பற்றியதாகக் கொள்ளப்படுகிறது. அதனால் இது வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு ஸ்வாமியின் பெயர் பசுபதீஶ்வரர். அம்பாள் பெயர் திரிபுரசுந்தரி. ஸ்தல விருக்ஷம் வன்னி மரம்.


 ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண் டாய் அண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே.




இங்கு அருணகிரி நாதர் ஒரு திருப்புகழப் பாடல் பாடியிருக்கிறார். 

சீத மதிய மெறிக்குந்                     தழலாலேசீறி மதனன் வலைக்குஞ்          சிலையாலேஓத மருவி  யலைக்குங்               கடலாலேஊழி யிரவு தொலைக்கும்           படியோதான்
மாது புகழை வளர்க்குந்               திருவாமூர்வாழு மயிலில் இருக்கும்            குமரேசாகாதலடியர் கருத்தின்                    பெருவாழ்வேகாலன் முதுகை விரிக்கும்          பெருமாளே.


இதுவும்  போன பாடலைப்போல, அகத்துறையில் அமைந்தது.

முருகன் இங்கு திருவாமூரில் மயில்மேல் எழுந்தருளியிருக்கின்றான். ஆனால் அவன்  அடியவர்களின் கருத்தில்  வாழ்கிறான்! 

காலன் முதுகை விரிக்கும் பெருமாள் என்கின்றார். அதாவது, காலன் முதுகைப் பிளக்கும்  பெருமாள். முருகன் அடியவர்களை யமபயத்திலிருந்து காப்பாற்றுவார். இங்கு கீழ் வரும் கந்தரலங்காரப் பாடல்களை நாம் நினவுகூறலாம் :


ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்

 காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்

  சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை

  மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.

பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பார் அறிய

வெட்டிப் புறம்கண்டு அலாது விடேன் வெய்ய சூரனைப்போய்
 முட்டிப் பொருத செவ் வேல் பெருமாள் திருமுன்பு நின்றேன்  கட்டிப் புறப்படடா, சத்திவாள் என்றன் கையதுவே.

மரண ப்ரமாதம் நமக்கு இல்லையாம்  என்றும் வாய்த்த துணை
 கிரணக் கலாபியும் வேலும் உண்டே; கிண்கிணி முகுள 
சரண ப்ரதாப, சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா 
பரண கிருபாகர, ஞானாகர, சுர பாஸ்கரனே.

தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத் 
 திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத் 
தொண்டாகிய என் 'அவிரோத ஞானச்சுடர் வடிவாள்'  
கண்டாயடா அந்தகா  வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே!

ஆகவே, முருகன்  அடியார்களுக்கு கால பயம் இல்லை!

மாது புகழை வளர்க்கும் திருவாமூர் என்று பாடுகிறார்  அடிகள்.  இது  அப்பர் ஸ்வாமிகளின்  சரித்திரத்துடன்  சம்பந்தப்பட்டது.  அப்பர்  ஜைன மதத்தில் சேர்ந்திருந்த நாட்களில் அவர் தமக்கையார் திலகவதியார்  இத்தலத்தில் இருந்து, அவர் மீண்டு சைவத்திற்கே  திரும்பிவரவேண்டும்  என  சிவபெருமானிடம் ப்ரார்த்தித்து வந்தார். பரமனும்  சூலை நோய் கொடுத்து அவரை  ஆட்கொண்டார். ஆக, அப்பர் திரும்பவும் தாய் சமயத்திற்கே  திரும்புவதற்கு திலகவதியாரின் தவமே காரணமானது. அதனால் அவர் புகழ் ஓங்கியது. இதையே இங்கு அருணகிரியார் கூறுகிறார்.

ஒரு சிறிய பாடலிலே எத்தகைய சீரிய கருத்துக்களைச் சொல்கிறார்  நம் நாதர்!





No comments:

Post a Comment