53.திருப்புகழ் 47. குழகர்கோயில்.
Wikiwand.
அருணகிரிநாதர் வேதாரண்யத்திலிருந்து 46வது தலமாக குழகர்கோயில் வருகிறார். இது கோடிக்கரை என்ற பெயரில் பலருக்கும் தெரிந்த இடம். சமுத்திரத்திற்கு அருகில் மிக அமைதியான இடம். கல்கியின் "பொன்னியின் செல்வன் "வாயிலாக லட்சக்கணக்கானவர்களுக்கு அறிமுகமான இடம். ஸ்வாமிபெயர் அமிர்தகடேஶ்வரர், குழகேஶ்வரர். அம்பாள் பெயர் அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி. சுந்தரர் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்.
கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அயலே இருந்தாற் குற்ற மாமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள் உமக் கார்துணையா இருந்தீரே.
மத்தம் மலிசூழ் மறைக்காடதன் தென்பால்
பத்தர்பலர் பாட இருந்த பரமா
கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
எத்தால்தனியே இருந்தாய் எம்பிரானே.
KRS in twitter.com. Also in facebook.
இங்கு அருணகிரிநாதர் பாடிய ஒரே பாடல் இருக்கிறது,
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
நேயமதி லேதினமு முழலாமல்
நீல முகிலான குழலான மடவார்கள் தன
நேய மதிலே தினமும் உழலாமல்
நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
நீரிலுழல் மீனதென முயலாமற்
நீடு புவியாசை பொருளாசை மருளாகி அலை
நீரில் உழல் மீன் அதென முயலாமல்
காலனது நாவரவ வாயிலிடு தேரையென
காயமரு வாவிவிழ அணுகாமுன்
காலனது நாவு அரவ வாயிலிடு தேரையென
காயம அருவாவி விழ அணுகாமுன்
காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு
கால்முருக வேளெனவு மருள்தாராய்
காதலுடன் ஒதும் அடியார்களுடன் ஆடி ஒரு
கால் முருகவேள் எனவும் அருள்தாராய்
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
தோகைகுற மாதினுட னுறவாடிச்
சோலை பரண் மீது நிழலாக தினைகாவல் புரி
தோகை குறமாதினுடன் உறவாடிச்
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
சோதிகதிர் வேலுருவு மயில்வீரா
சொரனென நாடிவருவார்கள் வனவேடர் விழ
சோதி கதிர்வேல் உருவும் மயில்வீரா
கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
கூடிவிளை யாடுமுமை தருசேயே
கோல அழல் நீறுபுனை ஆதி சர்வேசரொடு
கூடி விளையாடும் உமை தரு சேயே
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
கோடிநகர் மேவிவளர் பெருமாளே.
கோடு முக யானை பிறகான துணைவா குழகர்
கோடி நகர் மேவி வளர் பெருமாளே.
பதம் பிரித்துக்கொண்டால் அர்த்தம் சற்று எளிதாக விளங்கும்.
பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூவாசைகளில் உழலாமல் இருக்கவேண்டும்; எமன் வருவதற்குள் பக்தர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி ஒருமுறையாவது 'முருகவேளே ' என்று சொல்ல உன் அருள் வேண்டும்
என்கிறார்.
இங்கு ஒரு விஷயம் சொல்லுகிறார். யமன் சும்மா வருவதில்லையாம். அவன் [ நாம் செய்த பாவங்களை நினத்து ] திட்டிக்கொண்டே வருவானாம். அவன் நாக்கை பாம்பு எனச் சொல்கிறார். "காலனது நாவு அரவ வாய் " அதில் தேரை போல நாம் அகப்பட்டுக்கொள்ளும் முன்பாகவே முருகனை அழைக்கவேண்டும் என்கிறார். இதுபோல பல பாடல்களில் படியிருக்கிறார்.
குலகிரியின் புக்குற்று உரை உக்ரப் பெருமாளே !
உய்த்த உடல் செத்திட்டு உயிர்போமுன்
திகழ் புகழ் கற்றுச் சொற்கள் பயிற்றி
திருவடியைப் பற்றித் தொழுதுற்று
செனன மறுக்கைக்கு, பரமுத்திக்கு அருள்தாராய்.
www.pexels.com
இறுதிக் காலத்தில் திடீரென இறைவன் பெயரைச் சொல்வதோ, அவன் நினைவோ வராது. அதனால் எப்போதும் அவனை நினக்கவேண்டும் என்பது கீதையின் அறிவுரை.
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम्।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः।।8.6।।
யம்யம் வாபி ஸ்மரன் பாவம்
த்யஜத் யந்தே கலேவரம்
தம்தம் ஏவைதி கௌன்தேய
ஸதா தத பாவ பாவித :
குன்தியின் புதல்வனே ! கடைசிக் காலத்தில் எதை சிந்தித்த வண்ணமாக சரீரத்தை விடுகிறானோ, அந்த ஸ்வரூபத்தையே அடைகிறான். ஏனெனில் அவன் அதே சிந்தனையில் இருந்திருக்கிறான்.
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयम्।।8.7।।
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு
மாமனுஸ்மர யுத்ய ச
மய்யர்பித மனோ புத்திர்
மாமேவ ஏஷ்யஸி அஸம்ஶயம்.
ஆகையினால், நீ எல்லா காலங்களிலும் [இடைவிடாது ] என்னையே தொடர்ந்து நினைத்துக்கொண்டிரு. யுத்தமும் செய். என்னிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட மனம், புத்தியுடன் கூடியவனாக சந்தேகமில்லாமல் நீ என்னையே அடைவாய்.
ayurvedamaruthuvam.blogspot.com
பெரியாழ்வார் பொன்மொழி
பெரியாழ்வார் இந்த விஷயத்தைப் பற்றி அருமையாகச் சொல்கிறார்:
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு
ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!
சொல்லலாம் போதேஉன் நாமம் எல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!
மூப்பு வந்து, இந்த்ரியங்கள் மழுங்கி களைப்படையும் போது, என்னால் உன்னை நினைக்க முடியுமோ, முடியாதோ! அதனால் என்னால் முடிந்த போதே உன் நாமம் எல்லாம் சொல்லிவிட்டேன். அரங்கத்துப் பெருமாளே ! கடைசி காலத்திற்காக இப்போதே சொல்லி வைத்தேன். நான் அல்லல் படாமல் காக்க வேண்டும் என்று பாடுகிறார் பெரியாழ்வார்.
அருணகிரிநாதரின் வாக்கு எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருக்கிறது.
lotus, our national flower.
www.iloveindia.com
No comments:
Post a Comment