49.இரு அரிய அவதாரங்கள் -3
திருஞானசம்பந்தர்- மயிலாப்பூர் கபாலீஶ்வரர் கோயில்
By kapaliadiyar. Flickr. Thanks.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
எப்பொழுதெல்லாம் தர்மத்தின் நலிவும் அதர்மத்தின் எழுச்சியும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் நான் வெளிப்படுகிறேன் என்று கீதையில் பகவான் சொல்கிறார். சரி. ஆனால் தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் நலிவடைய வேண்டும்? இது நமக்குப் புரியாத விஷயம்.
எல்லா தர்மத்திற்கும் ஆதாரமாக இருப்பது வைதீக தர்மம்- ஸனாதன தர்மம்.இதற்கு அசுரர்கள் கெடுதல் செய்தபோது ஸுப்ரஹ்மண்யர் அவதரித்து, தேவஸேனாபதியாகி, அசுரர்களை அடக்கி தர்மம் மீண்டும் தழைக்கச் செய்தார். இது புராண காலம்.
சரித்திர காலத்தில் தமிழ் நாட்டில் இப்படி ஒரு நிலை தோன்றியது. அரசர்களே அசுரர்கள் மாதிரி ஆனார்கள். ஜைனர்களும் பவுத்தர்களும் அரசர்களின் ஆதரவுடன் வைதீக தர்மத்திற்கும் அதன் அங்கமான சிவ-விஷ்ணு வழிபாட்டிற்கும் குந்தகம் விளைத்தனர். கி.பி.7ம் நூற்றாண்டில் இத்தகைய ஒரு நிலை நிலவியது. பல்லவன் மஹேந்த்ர வர்மன் ஜைன மதம் சார்ந்திருந்தபோது, திருநாவுக்கரசருக்கு எப்படி துன்பம் தந்தான் என்பதை நாம் அறிவோம். அப்பரின் அருள் திறத்தால் அவன் பிறகு மாறினான்.
அப்பரின் சம காலத்தவர் திருஞான சம்பந்தர். இவரைப் பற்றியும் பொதுவாக ஆஸ்திகர்களுக்குத் தெரியும். 3 வயதில் இறையருளால் ஆட்கொள்ளப்பட்டு , தலம் தோறும் சென்று தமிழில் பதிகம் பாடி சிவ நெறியைப் பரப்பினார். 16 வருஷங்களே வாழ்ந்த இவர் காலத்தில் பல அற்புதச் செயல்கள் நிகழ்ந்தன.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் இருந்தது, மதுரையை ஆண்ட பாண்டிய அரசனை [ கூன் பாண்டியன்- நின்றசீர் நெடுமாறன்- நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி கிபி.640-670 ] ஜைனர்களின் பிடியிலிருந்து மீட்டு,அதன் மூலம் மீண்டும் வைதீக- சைவ சமயம் தமிழ் நாட்டில் தழைக்குமாறு செய்தது ஆகும்.
தேவார மூவரில் ஒருவராகவும், சைவ சமய ஆசார்யர்கள் நால்வரில் ஒருவராகவும் , 63 நாயன்மார்களில் ஒருவராகவும் மதிக்கப்படும் சம்பந்தர், வைதீகம் தழுவிய சிவ வழிபாட்டையே நிலை நாட்டினார். இதுவே தமிழ் நாட்டுக்கு உரிய, தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிய பிராசீன சம்பிரதாயம். இதை சேக்கிழார் ஸ்வாமிகள் பெரியபுராணத்தில் சொல்கிறார்:
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
இங்கு சேக்கிழாரின் சொற்களைக் கவனிக்க வேண்டும். "வேத நெறி "
என்கிறார். அதாவது வேத தர்மம். நமது தர்மத்திற்கு மதம் என்ற பெயர் இல்லை. அது அந்நியர்கள் சொன்னது. அதேபோல், சைவத் துறை
என்கிறார். சைவ சமயம் எனச் சொல்லவில்லை. வேத தர்மம் என்னும் நதிக்குப் பல துறைகள் இருக்கின்றன. நமது பெரியவர்களின் மனதும் மதியும் விசாலமானவை. சமயம் என்ற குடுக்கைக்குள் அவர்கள் புகுந்துகொள்ளவில்லை.
சம்பந்தர் கௌண்டின்ய கோத்ரத்தில் வந்த அந்தணர் பிரிவைச் சேர்ந்தவர்."கவுணியன் ஞானசம்பந்தன் " , "நான்மறைவல்ல
ஞானசம்பந்தன் ", "அருமறை அவைவல்ல அணிகொள் சம்பந்தன் " என்றெல்லாம் தம்மைச் சொல்லிக்கொள்கிறார்.
அதேசமயம், தமிழில் பதிகம் பாடி சிவபெருமானை வழிபடும் புதிய முறையையும் சம்பந்தரே தோற்றுவித்தார். அதனால் "தமிழ் ஞான சம்பந்தன் " , "முத்தமிழ் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலை", "மறையினார் மல்கு காழித் தமிழ் ஞான சம்பந்தன் ", "நற்றமிழ் ஞானசம்பந்தன் " என்றெல்லாமும் குறிப்பிடுவார்.
சம்ஸ்க்ருதமும் தமிழும் சிவபிரானே தோற்றுவித்தது என்பது நமது புராதனர்களின் கொள்கை. இதைத் திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.
மாரியும் கோடையும் வார்பனி தூங்க நின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்குக் கருணை செய்தானே.
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.
மரபு வழிவந்த உண்மையான சமயப் பெரியவர்கள் மொழியைவைத்து சண்டையிடவில்லை; காசு பண்ணவும் இல்லை.
தமிழ் நாட்டில் நிலவிய சைவம் வேதத்தையும் ஆகமத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இதையே திருமந்திரம் முதலிய நூல்களில் பார்க்கிறோம்.
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத்தகும் அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.
திரு நெறியாவது சித்தசித்தன்றிப்
பெரு நெறியாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
‘வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் ;
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன ;
நாதன் உரை அவை நாடில், இரண்டு அந்தம்
பேதம் அது என்னில் பெரியோர்க்கு அபேதமே’ (8-28)
திருமந்திரம்.
சம்பந்தர் தேவாரத்தில் பரவலாக அங்கங்கே நடந்த வேத வேள்விகளைப் பற்றியும், எழுந்த வேத ஒலியையும் பற்றிப் படிக்கிறோம்.
நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே
செய்தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர்கொள் செங்காட்டங்குடி
வேதத்தொலியாலும் மிகு வேணுபுரம்
கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை
விதியுடை வேதியர் தாம் தொழும் வெண்ணி
தீதில் அந்தணர் ஒத்தொழியாத் திருவான்மியூர்
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்
போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதனென நள்ளிருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே.
என்றெல்லாம் நெடுகிலும் பாடுகிறார்.
[ ஆகமங்களும் சம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கின்றன.]
நலிவுற்றிருக்கும் கோயில்களில் ஒன்று.
நடுவில் சில அரசர்களின் செயல்களால் சைவ சமயத்திற்கு நலிவு நேர்ந்தபோது, சம்பந்தர் அதைச் சரிசெய்தார். அவர் சரித்திரத்தை ஊன்றிக் கற்பவர்களுக்கு இது மனித முயற்சியை மீறிய தெய்வச்செயல் என்பது விளங்கும்.
பிற மதப் பிரசாரகர்களும், மதம் மாற்றுபவர்களும் சற்று தீவிரமாகவே இருப்பார்கள். அவர்கள் பேச்சிலும் செயலிலும் ஒரு வேகம் இருக்கும். அதுவும் அரசர்-அரசினரின் ஆதரவு இருந்துவிட்டால், இன்னும் கொண்டாட்டம்தான். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை 7ம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ் நாட்டில் இருந்தது. தமிழின் இதயமாகிய பாண்டிய நாட்டின் அரசன் ஜைனர் பக்கம் சார்ந்துவிட்டான். வைதீக சைவம் பல இன்னல்களைக் கண்டது. சைவர்களாகவே இருந்த அரசி மங்கையர்க்கரசியாரும். மந்திரி குலச்சிறையாரும் இதைக்கண்டு வருந்தினர். அப்போது தன் தல யாத்திரையில் வேதாரண்யத்தில் இருந்த சம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். அந்த சமயத்தில் சம்பந்தர் பாடிய பதிகத்தில் அவர் மதுரை வருவதற்கான நோக்கத்தை தெளிவாகச் சொல்கிறார்.
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
வைதி கத்தின் வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
[ பக்கத்தில் 'சில்பி' வரைந்த சம்பந்தர் சித்திரம்]
மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
அந்த ணாளர் புரியு மருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
அழல தோம்பு மருமறை யோர்திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
அழல தோம்பு மருமறை யோர்திறம்
விழல தென்னு மருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழலி லங்கு திருவுருச் சைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
சமணர்களையும் பௌத்தர்களையும் வென்று வைதீக சைவத்தை மீண்டும் தழைக்கச்செய்யவே சம்பந்தர் மதுரை வருகிறார்.
மதுரையில் ஜைனர்கள் சம்பந்தரை வாதுக்கு அழைத்தனர். அனல் வாதம், புனல் வாதம் என்ற அந்த வாதங்களில் ஜைனர்கள் தோற்றனர். அதில், புனல் வாதத்தின்போது, சம்பந்தர் ஏட்டில் எழுதி புனலில் (வைகை ஆற்றில் ) இட்ட பதிகம் இது:
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே
ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.
இதில் வேதத்தின் பெருமையே சொல்லப்படுகிறது. சிவனே வேத முதல்வன். விபூதியே சிவபக்தர்களின் செல்வம். [ வேதத்திலுள்ளது நீறு- விபூதிதான் வேதத்தில் சொல்லப்படுகிறது ] வேதத்தைப் பயின்று போற்றும் அந்தணர்களும், அவர்கள் புரியும் வேள்வியும். வேள்விகள் போற்றும் வானவர்களும். வேள்விக்குரிய பொருள்களைத் தரும் ஆவினங்களும் , இந்த நெறியைக் காக்கும் அரசர்களும் ஓங்கவேண்டும், உலகம் தீங்கின்றி இருக்கவேண்டும் என்ற முதல் பாடல். வேத கோஷத்தின் நேரான தமிழாக்கமாகும்.
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேந மார்கேண மஹீம் மஹீஶா: |
கோ ப்ராஹ்மணேப்யோ ஶுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ||
இவ்வாறு வேதம் சார்ந்த சிவ வழிபாட்டையே சம்பந்தர் ஓங்கச்செய்தார். இந்த வைதீக சைவம் தான் தமிழ் நாட்டில் பழங்காலந்தொட்டு இருந்து வருவது. இதை உருவாக்கி அளித்தது சிவபெருமானே என்பதை சேக்கிழார் ஸ்வாமிகள் பெரியபுராணத்தில் சொல்கிறார் :
பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்
மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதீகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென வையமுற வெய்தி. 32
இவ்வாறு சிவ வழிபாடு வேதத்தில் நிலைத்தது, அனாதியானது. இதையே சம்பந்தர் ஓங்கச்செய்தார்.
மதுரையில் ஜைனர்கள் சம்பந்தரை வாதுக்கு அழைத்தனர். அனல் வாதம், புனல் வாதம் என்ற அந்த வாதங்களில் ஜைனர்கள் தோற்றனர். அதில், புனல் வாதத்தின்போது, சம்பந்தர் ஏட்டில் எழுதி புனலில் (வைகை ஆற்றில் ) இட்ட பதிகம் இது:
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே
ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.
இதில் வேதத்தின் பெருமையே சொல்லப்படுகிறது. சிவனே வேத முதல்வன். விபூதியே சிவபக்தர்களின் செல்வம். [ வேதத்திலுள்ளது நீறு- விபூதிதான் வேதத்தில் சொல்லப்படுகிறது ] வேதத்தைப் பயின்று போற்றும் அந்தணர்களும், அவர்கள் புரியும் வேள்வியும். வேள்விகள் போற்றும் வானவர்களும். வேள்விக்குரிய பொருள்களைத் தரும் ஆவினங்களும் , இந்த நெறியைக் காக்கும் அரசர்களும் ஓங்கவேண்டும், உலகம் தீங்கின்றி இருக்கவேண்டும் என்ற முதல் பாடல். வேத கோஷத்தின் நேரான தமிழாக்கமாகும்.
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேந மார்கேண மஹீம் மஹீஶா: |
கோ ப்ராஹ்மணேப்யோ ஶுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ||
இவ்வாறு வேதம் சார்ந்த சிவ வழிபாட்டையே சம்பந்தர் ஓங்கச்செய்தார். இந்த வைதீக சைவம் தான் தமிழ் நாட்டில் பழங்காலந்தொட்டு இருந்து வருவது. இதை உருவாக்கி அளித்தது சிவபெருமானே என்பதை சேக்கிழார் ஸ்வாமிகள் பெரியபுராணத்தில் சொல்கிறார் :
பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்
மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதீகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென வையமுற வெய்தி. 32
இவ்வாறு சிவ வழிபாடு வேதத்தில் நிலைத்தது, அனாதியானது. இதையே சம்பந்தர் ஓங்கச்செய்தார்.
No comments:
Post a Comment