62.திருப்புகழ் 56.திருவிடைமருதூர்-1
மத்யார்ஜுனம் என்று பெயர்பெற்ற மிகப்பெரிய தலம். மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புப் பெற்றது. மஹாலிங்கேஶ்வரர்.ப்ருஹத் சுந்தர குசாம்பிகை என்னும் நன்முலை நாயகி அம்மன். மூவராலும் பாடப்பெற்றது. மணிவாசகரும் பட்டினத்தாரும்கூடப் பாடியிருக்கிறார்கள். பலவித சிறப்புக்கள் பெற்ற அரிய தலம். இது அருணகிரிநாதர் தரிசித்த 56வது தலம்.
இங்கு நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.
வினையும் மலமும் அகல
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் அவரொரு பெரியோராய்
அருகம்புல்லின் நுனியில் உள்ள பனிபோன்ற துளி (விந்து) ஒரு பெரிய உடலை அடைந்ததாகி, ஒரு குழந்தை உருவம் எடுத்து வெளிவர, அந்த அருமைக் குழந்தையின் மழலையில் கனிவுகொண்டு மனம் உருகி, அதன் தாயும் தந்தையும் ப்ரபஞ்ச மாயையினால் அக்குழந்தைமீது ஆசைகொண்டு, வெகு அருமையாய் வளர்க்க, மொழுமொழு என வளர்ந்து, கவலையற்று இன்ப வாழ்க்கையுடன் இளம் பருவத்தினராய்,பின்பு பெரியவனாகின்றான்.
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் அவியுறு சுடர்போலே
அழகிய நடையுடையவனாய், ஒய்யாரமான பேச்சுக்களில் பழகி, உயிர்போன்ற மனைவிமாருடன் , விழப்போகின்ற சுவரை -மாதர்கள் என்ற பெரும்குழியை - என்றும் நிலைத்திருக்கும் சுகம் என நினைத்து, வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்துவிட்டு, அணுவளவு தவிடும் கீழே விழுந்துவிடக்கூடாதென மனம் கெட்டியாகி, ஆசைக்கு ஆளாகி, ஊசியின் தன்மை பூண்டவராய், அணைந்துபோவதற்குமுன் சுடர்விட்டு எரியும் தீபம் போல [பின் வரும் கேடு தெரியாமல் மகிழ்ந்திருந்து ]
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா விதிதனை நினையாதே
ஒரு ஏழையோ, தவசியோ வந்து சோறுகேட்டால் உடனே "மேலை வீட்டுக்குப் போய்க்கேள், கீழை வீட்டுக்குப் போய்க்கேள் " எனச் சொல்லிக்கொண்டே, திடுதிடுவென நடந்துபோய், பிச்சைகேட்டவர் வீட்டுக்குள் நுழையுமுன்பாகவே, எதிரே வேகமாகச் சென்று , அவர்கள்மேல் மிகவும் கோபித்து, நாய்போல மேலே பாய்ந்து, தனது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப்போவதற்கான பேச்சைப்பேசும் வீணர்களின் பேச்சையே நல்லதென மேற்கொண்டு, வரப்போகும் விதியின் போக்கை சற்றும் யோசியாமல்,
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் மிடையுற வருநாளில்
மினுகு மினுகு என்று செழிப்பாக இருந்த தேகம் முற்றும் வளைந்து, நலிவடைந்து.
வீண்பொழுது போக்கும் பாவிகளின் சமூகத்தையே நாடும் பாவியாகி, 'மறு பிறப்பு உண்டே, அதில் துன்பம் நேருமே ' என யாராவது அறிவுரை சொன்னால், "உமது பேச்சை நிறுத்தும்; கோரைப்புல் போலத் தோன்றி மறைபவர்கள் மறுமை என்ற ஒன்றைப் பார்ப்பார்களா என்ன " என்று எதிர்த்துப்பேசியும், துறவு பூண்ட பெரியவர்களையும் வேதியர்களையும் வெடுவெடுவென கடுமையாக, தவில் வாத்யம் போல இரைந்து பேசியும், யாளிபோலத் திறந்தவாயுடன் மாதருடன் பொருந்திக் காலம் கழித்து வரும் நாளில்,
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
ஏழ்மைதசை நெருங்கிவர, கையில் உள்ள பொருள்கள் விலகி ஒழிய, வாத நோய், ஊதுகாமாலை, சோகை, மகோதரம், வயிற்றுவலி , ஒருவகைப்புண் கட்டி ஆகிய இவை யெல்லாம் வர, இரண்டு கண்களிலும் பீளை ஒழுக, கோழை மேலேவந்து, கொழகொழ என்று ஒழுகிவிழ, உடலில் சதையெல்லாம் வற்றிப்போய், நாடியும் பிசகி, இவர் எப்படிப் பிழைப்பார் என மனையவளும் தைரியம் இழக்க,
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் மனிதர்கள் பலபேச
கலக்கமடைய, வீட்டில் உள்ளவர்கள் 'கிட்டே போய்ப் பாருங்கள் ' என்று சொல்ல, பெண்கள் சீ என வெறுக்க, குழந்தைகள் சீ என வெறுக்க,கனவிலே தேர் வருவது போலவும், குதிரை வருவது போலவும் காட்சிகள் வர, பெரிய சுடுகாடு வாவாஎன அழைக்க, வாழ்ந்திருக்கும் வீடு போ போ என வெருட்டி அனுப்ப, சாமர்த்தியம் எல்லாம் அழிந்து ஒடுங்க, உற்சாகம் எல்லாம் அழிந்து ஒடுங்க, பேச்சு குழற, கண்கள் சொருகிப்போக, மேல்மூச்சு எழ, உயிர் பிரியும் நாளில் மனிதர்கள் பலவும் பேசுவார்கள்.
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனி லிடும்வாழ்வே
இவர் முடிவுடன் நமது வளங்கள் எல்லாம் போய்விடுமே என சுற்றத்தார்கள் கதறி அழ, அறியாமை கொண்ட மாதர்கள் தலையில் அடித்துக்கொண்டு மேலே விழ, என்னுடைய பொருள், என்னுடைய அடிமை, ஆள் என்ற அறிவு சிறிதும் இல்லாமல் போக, ஈக்கள் ஒரேயடியாக மொய்க்க, வாய் ஆவென்று திறந்து உயிர் கழிகிறது, உடனே பலவித ஒலியெழுப்பும் பறை முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, சுடுகாட்டுப் பிரதேசத்தில் சேர்க்கப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு தீயில் இடப்படும் வாழ்வே இது.
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே.
உனது இரு திருவடிகளைப் போற்றும் அடியவர்கள் இத்தகைய வாழ்க்கையைப் பெறுவதென்றால், உலகத்தவர்கள் உன்னை ஏசமாட்டார்களா? பாசத்தை நாசம் செய்யும் பெருமானே ! ஆதலால் [ நல்வினை தீவினை என்னும் ] இரு வினையும்,
[ஆணவம், கன்மம், மாயை என்ற ]மும்மலங்களும் அற்றுப்போகவும், இறப்பு- பிறப்பு என்ற சுழற்சி ஒழியவும், ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு இருக்குமாறு அந்த பேரின்ப நிலையை அருளுவாயாக!
திருவிடைமருதூரிலே இருக்கும் தனி நாயகனே ! லோக நாயகனே ! தேவர்கள் நாயகனே !
இரு படங்களும்: aathirainayagan.blogspot.in. நன்றி.
பெரிய பாடல் ! அரிய, உருக்கமான பாடல்! இதை ஆழ்ந்து படித்து இதன்மீது தியானம் செய்ய வேண்டும்! வாழ்க்கையை - அதன் பல நிலைகளை -படம் பிடித்தது மாதிரி விளக்குவதில் அருணகிரிநாதருக்கு இணையே இல்லை. நிறைய பாடல்களில் இவ்வாறு பாடியிருக்கிறார். கந்தரலங்காரத்தில் சுருக்கமாகச் சொல்கிறார் :
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.
தெய்வம்தான் துணையாக இருக்கும். தத்துவ வாதங்களையெல்லாம் தள்ளிவிட்டு, மலர்த்தாளையே பற்றிக்கொள்ள வேணும். இதையே பட்டினத்தாரும் பாடுகிறார்:
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல் கொடு போட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி யடங்கி
ஓர் பிடி நீறுமிலாத உடம்பை
நம்பு மடியேனை இனி ஆளுமே.
[ உடற்கூற்று வண்ணம் ]
draraman.blogspot.in. Thanks.
இவ
இவர்
மினுகு

No comments:
Post a Comment