68.திருப்புகழ் 62.கும்பகோணம் -3
தேரில் கும்பேஶ்வரர், விநாயகர், முருகன்
படம்: பா.ஜம்புலிங்கம். நன்றி
உலக வாழ்க்கை
உலக வாழ்க்கை இன்பமானதா, துன்பமானதா ? காணும் இந்த உலகம்தான் உண்மை என்ற கொள்கையுடையவர்கள் உலகம் இன்பமயம் என்று காட்டுவார்கள். சிறிது தீர்க்கமாக சிந்திப்பவர்கள் இது இரண்டும் கலந்தது [மிஶ்ர லோகம் ] என்பார்கள்.
வாழ்க்கை விதிப்படி நடக்கிறது; அதனால் இது "இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே " என்று புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பாடினார்.
அருளாளர்கள் ,ஞானிகளோ இந்த உலகம் சாரமற்றது ; இதை நாம் இன்னும் பெரிய விஷயத்திற்குப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பார்கள். இந்த உலகம் நிலையில்லாதது; இதில் எதுவுமே நிலைப்பதில்லை; கடவுள் ஒருவரே சத்தியம் என்பார்கள். ஆதி சங்கரர் சொல்கிறார் :
नलिनीदलगतजलमतितरलं
तद्वज्जीवितमतिशयचपलम् ।
विद्धि व्याध्यभिमानग्रस्तं
लोकं शोकहतं च समस्तम् ॥ ४॥
நளினீ தலகத ஜலம் அதி தரலம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் I
வித்தி வ்யாத்யபி மானக்ரஸ்தம்
லோகம் சோக ஹதம் ச ஸமஸ்தம் II
- பஜகோவிந்தம்
- பஜகோவிந்தம்
[ படம் : சொல்வனம், நன்றி ]
இந்த உலகம் தாமரை இலைத் தண்ணீர் போல சலனம்மிக்கது (நிலையில்லாதது) இங்கு மக்கள் வியாதியினாலும் செருக்கினாலும் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். .இந்த உலகம் எல்லாம் சோகத்திற்கு இடமானது என்பதை அறிந்துகொள்.
இந்த உலகம் தாமரை இலைத் தண்ணீர் போல சலனம்மிக்கது (நிலையில்லாதது) இங்கு மக்கள் வியாதியினாலும் செருக்கினாலும் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். .இந்த உலகம் எல்லாம் சோகத்திற்கு இடமானது என்பதை அறிந்துகொள்.
அருணகிரிநாதர் ஞானிகள் பரம்பரையைச் சேர்ந்தவர். கும்பகோணத்தில் பாடிய இரண்டு பாடல்களில் பிறவித் துன்பத்தைப் பற்றிச் சொல்கிறார்.
பிறவித் துன்பத்திலிருந்து விடுபட
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் றிடுவேனோ
துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
புகட்ட ரங்கிய விரக துரங்கத் திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
புகட்ட ரங்கிய விரக துரங்கத் திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
பரிச்சு மந்திடு குமர கடம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் பெருமாளே.
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
பரிச்சு மந்திடு குமர கடம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் பெருமாளே.
கருத்த மயிரும் வெளுத்துப்போய், வரிசையாய் நின்றிருந்த பற்களும் விழுந்துவிட, உள்ளே பல கருத்துக்களுடன் இருந்த புத்தியும் கலங்கிப்போய், நோய்கள் உடலைச் சுருட்டி மடக்க,
கலக்கம் அடைந்து, இந்த வாழ்க்கை போதும்,போதும் என்று மனம் சலித்து, நீர்வற்றிய பழம்போல, நிமிர்ந்து ஓங்கியிருந்த முதுகு கூன்விழ, கோழையும் இருமலும் கழுத்திலே வந்து நிற்க,
கொழுத்திருந்த உடல் வற்றிச் சுருங்கி, ஒரு தடியைக் கையிலே நடுக்கத்துடன் பிடித்து, மனைவியும் நிந்தித்து இகழ, அவமதிப்புக்கிடமாகி, அடுத்துள்ள பிள்ளைகளும் பழிக்க, ஜடப் பொருள் போல ஆகி,
உடலெல்லாம் அழுக்கு சேர, வேதனைப்படும் உடலுக்கு இடமான பிறப்பு என்னும் சேறுபோன்ற கடலில் அழிந்து போவதை விட்டு,பெருமைவாய்ந்த உன் திருவடிகளை சரணடைந்து நான் இருப்பேனோ !
வெளியிடங்கள் எல்லாம் பொடிபட்டு நிலை கலங்கவும், பெரிய கடலும் அதன் உட்புறம் கலங்கிக் குழம்பவும், அசுரர்களின் மீது பாயவிட்டு, அவர்களைத் தேய்த்துச் சிதைத்த சாமர்த்தியமுடைய குதிரையாகிய மயிலேறிய பராக்ரமசாலியாகிய வீரனே !
க்ரௌஞ்சகிரி பிளவுண்டு அதன் வலிமை அழிய , வெற்றியடைந்து, பகைவர்களைக்கொன்று, அரக்கர்களின் வலிமைமிக்க தலைகள் நெரிபட்டு அழிய, உள்ளடங்கிய ரத்தம், கொழுப்பு இவை பொங்கி மேலெழப் போர்செய்த வீரனே !
சிறிய தண்டைகளை அணிந்தவனே ! வேட்டுவக்குழந்தைகள் பயப்படும்படி, கோபம்மிக்க சிங்கம் திரிகின்ற வள்ளிமலையில், தினைப்புனத்தில் விளங்கியிருந்த வள்ளியை விரும்பி அடைந்து அதனால்,
மகிழ்ச்சி கொண்ட மனத்தையுடைய முருகனே ! மயில் என்னும் குதிரை சுமக்கின்ற குமரனே !கடம்பனே ! திருக்குடந்தையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே !
நான் பிறப்பு என்னும் சேற்றுக் கடலில் விழாமல் உன் திருவடிகளை அடைவேனோ !
பிறப்பு (இறப்பு ) என்னும் கடலை இறைவன் அருளின்றித் தாண்டமுடியாது என்பது பாரதத்தின் பொதுவான கொள்கை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
என்பது குறள்.
வாழ்க்கையில் முதுமை, நோய் இவற்றால் படும் அவலங்களை பல பாடல்களில் விரிவாகவே சொல்லியிருக்கிறார் அருணகிரிநாதர்.
இங்கே முருகனைக் கடம்பா என விளிக்கிறார். கடம்ப மரம், மலர் முருகனுக்கு உகந்தது. ஆனால் எது சரியான கடம்பமரம் என்பது தெரியவில்லை. தாவர இயலில் 5 மரங்களைச் சொல்கிறார்கள்.
இங்கே முருகனைக் கடம்பா என விளிக்கிறார். கடம்ப மரம், மலர் முருகனுக்கு உகந்தது. ஆனால் எது சரியான கடம்பமரம் என்பது தெரியவில்லை. தாவர இயலில் 5 மரங்களைச் சொல்கிறார்கள்.
Neolamarckia cadamba
J.M.Garg. CC BY-SA 3.0
Creativecommons via Wikimedia Commons.
ஞானம் பெற
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு முடலூடே
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை யனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு முடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு மருள்வாயே
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு முடலூடே
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை யனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு முடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு மருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திருப்பு யந்தரு மோகன மானினை யணைவோனே
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
ஜனனம் என்கின்ற பொய்மையான ஒரு விளையாட்டாகிய கூத்தென்ன,
அந்தப் பிறப்புடன் கூடிய ஆபாசம் என்ன, பிறப்பால் ஏற்படும் குடல், அந்தக் குடலைக் கிழித்தெழுவதுபோல் மேலெழுகின்ற ஆணவம் என்ன, அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை என்ன,
ஏற்பட்ட பல ஜாதி என்ன, அதைப்பற்றி வாதிப்பவர் என்ன, கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன, சில சமயம் கோபித்து எழுவதுபோல், துன்பம் மிகுந்து எழும் பிறப்பு ஒரு நோய் என்றே இவ்வாழ்வை எல்லோரும்
ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது என்று கூறுவது என்ன, (பிணத்தை ) எடுங்கள் சுடுகாட்டிற்குப்போக என்பதென்ன, அங்கேபோய் கவிழ்க்கப்படுவதான இந்த உடல் தீயால் பொடியாகிச் சாம்பலாய்விடும்; அத்தகைய உடலை நான் விரும்பிப் போற்றி,
அதை அலங்கரிக்க கடுக்கன் ஆதிய சில ஆபரணங்களை அணிவது என்ன,வேத மந்திரங்களால் பெறப்படும் சாஸ்திர நூல்களைப் படிப்பது என்ன, பல திறத்ததான ஆசைகளைக் கொண்டிருப்பதென்ன --
ஆக இவை எல்லாவற்றையும் ஒழிக்கவல்ல சிவயோகத்தையும், சிவஞானத்தையும் அருள்வாயாக !
பலவித சந்த ஒசைகள் முழங்க பறை, தாரை, தப்பட்டை, வெற்றிமுரசு ஆகியவற்றுடன் கூடி,
போருக்கு என்று வந்த அசுர சேனைகளை வளைத்து, கொடிய கோபத்துடன் வேலாயுதத்தைச் செலுத்திய பராக்ரமசாலியே ! உனது பெருமையை அறிந்துள்ள தவசீலர்களுக்கு அருள்பாலிப்பவனே !
தினைப்புனத்திலே அன்புடன் மயில் போன்ற வள்ளியிடம் சரணடைந்த , உன்னை மயக்கவல்ல மான் வள்ளியை அணைபவனே !
சிவத்தினின்றும் தோன்றிய செழும்சுடரே ! தவம் செய்வோர் பொருட்டு பரமனாக வெளித்தோன்றி வந்து அருளும் குழந்தை க்ருபாகரனே ! திருக்குடந்தை வாழும் முருகா ! தேவர்கள் பெருமாளே !
[உலக விஷயங்கள் எல்லாம் அற] சிவயோகமும் ஞானமும் அருள்வாயே !
ஒரு முக்கிய விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். பிறப்பு - இறப்பு இதற்கிடையில் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பல கருத்துக்கள் இருக்கின்றன; வாத-பிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ண மிருக்கின்றன. இவற்றுக்கு முடிவே இல்லை. தெய்வ ஞானம் ஒன்றே இவற்றுக்கு முடிவுதரும். அதை தெய்வ அருளால்தான் பெறமுடியும். அதையே இங்கு வேண்டுகிறார். " எல்லாம் அற என்னையிழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே " என்று இதையே கந்தரனுபூதியில் சொன்னார் !
இப்படி கும்பகோணத்தில் அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.
மானஸரோவர்.
No comments:
Post a Comment