39.திருப்புகழ் 37.கன்னபுரம்
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 36 வது தலம் கன்னபுரம். இது நன்னிலத்திற்கு அருகே உள்ள 'கண்ணபுர'மாக இருக்கலாம். கொங்கு நாட்டிலும் ஒரு கன்னபுரம் இருக்கிறது என தணிகைமணியவர்கள் எழுதியிருக்கிறார்.[ காங்கேயத்துக்கருகே உள்ளது. விக்ரமசோழீஶ்வரர் கோயில். இதுவே திருப்புகழ் தலம் என்பது சிலர் கருத்து.]
இத்தலத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இங்குள்ள பெருமாளைப் பற்றி காளமேகப் புலவர் பாடியதாக ஒரு ரசமான பாடல் இருக்கிறது.
கன்னபுர மாலே கடவுளிலு நீயதிகம்
உன்னிலுமே யானதிக மொன்றுகேள் –முன்னமே
உன்பிறப்போ பத்தாம்முயர் சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப் பெண்ணத் தொலையாதே .
கன்னபுரத்தில் இருக்கும் திருமாலே ! உனக்கொன்று சொல்கிறேன் கேள்.
எல்லா கடவுள்களிலும் நீ பெரியவன். ஆனால் உன்னைவிட நான் பெரியவன். எப்படி? உனக்கோ பத்து அவதாரங்கள். பெரிய சிவனுக்கு ஒன்றுகூட இல்லை ! எனக்கோ எண்ண முடியாத அளவு பிறவிகள். அதனால் நான் தானே பெரியவன் !
இவர் கன்னபுரக்கடவுளைப்பற்றிப் பாடிய இன்னொரு பாடல்:
கண்ணபுரங்கோயில் கதவடைத்துத் தாழ்போட்டார்
மண்ணையுண்டார் வெண்ணையுண்ட மாயனார் - எண்ணும்
சிரக்கப்பறை யேந்திச் செங்காட்டில் ஈசர்
இரக்கப் புறப்பட்டா ரென்று.
திருச்செங்காட்டங்குடியில் சிவபெருமான் ப்ரம்மாவின் மண்டையோட்டை பிக்ஷா பாத்திரமாகக்கொண்டு பிச்சை எடுக்கக் கிளம்பிவிட்டார். மண்ணையும் வெண்ணையையும் உண்ட மாயவனாகிய திருமாலும் எங்கே அவ்விதம் பிச்சை எடுக்கக் கிளம்பிவிடுவாரோ என நினைத்து கண்ணபுரம் கோயிலில் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டார்கள் !
வேங்கை- இலையும் பூவும்.
இங்கு அருணகிரிநாதர் அருமையான பாடல் ஒன்று பாடுகிறார்.
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
கண்ணவிரச் சுறாவீட்டு கெண்டையாளைக்
கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
கன்னிலையிற் புகாவேர்த்து நின்றவாழ்வே
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
பொன்னிநதிக் கராநீர்ப்பு யங்கனாதா
பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் தம்பிரானே.
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
தன்னமயப் புலால்யாக்கை துஞ்சிடாதென்
றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
கன்னியசற் றுலாமூச்ச டங்கயோகம்
என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
டின்னணமெய்த் தடாமார்க்க மின்புறாதென்
றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
தின்னதெனப் படாவாழ்க்கை தந்திடாதோ
வேங்கை- இலையும் பூவும்.
இங்கு அருணகிரிநாதர் அருமையான பாடல் ஒன்று பாடுகிறார்.
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
கண்ணவிரச் சுறாவீட்டு கெண்டையாளைக்
கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
கன்னிலையிற் புகாவேர்த்து நின்றவாழ்வே
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
பொன்னிநதிக் கராநீர்ப்பு யங்கனாதா
பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் தம்பிரானே.
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
தன்னமயப் புலால்யாக்கை துஞ்சிடாதென்
றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
கன்னியசற் றுலாமூச்ச டங்கயோகம்
என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
டின்னணமெய்த் தடாமார்க்க மின்புறாதென்
றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
தின்னதெனப் படாவாழ்க்கை தந்திடாதோ
[அன்னமிசை என்று தொடங்கும் பாடல்.]
கற்கண்டு போன்ற மொழியும், பின்னிய கூந்தலும், அன்ன நடையும் தழை இலைகளால் ஆன ஆடையையும் கொண்டு, சுறாமீனையும் அடக்கவல்ல கெண்டைமீன் போன்ற கண்களுள்ள வள்ளியை,
களவுகொண்டு போவதற்காக பின்னிரவில், பொருத்தமான கல்குகையில் அசைவில்லாமல் வேர்வையுடன் காத்திருந்த செல்வனே !
பொன் மேருவிற்குப்பிறகு அசைக்கமுடியாததான சோழ அரசனின் ஆட்சியில் அழகிய கன்னபுரத் தலத்தில் இருந்து, முதலைகள் வாழும் காவிரி நதிக்கரையில் புயங்க நடனம் செய்யும் சிவபிரானுக்குத் தலைவனே !
கயிலை மலையிலும், லக்ஷ்மி வாசம் செய்யும் வைகுண்டத்திலும் உள்ள புண்ணியர்களுக்கும், அழகிய பொன்மகுடங்களை அணிந்த தேவலோகத்து இந்த்ரர்களுக்கும் தம்பிரானே !
அன்னப் பறவையில் இருப்பவனும், திருமாலின் உந்தித் தாமரையில் உதித்தவனுமான பிரம்மாவினுடைய கணக்குச் சீட்டின்படி நியமிக்கப்பட்ட அந்த காலம் வரை ,
சோற்றுமயமான இந்த மாமிச உடலானது அழிந்துபோகாது என்ற நினைவுடன்,
பல மயக்க எண்ணங்களைக்கொண்டு, அயலார்மீது ஐம்பொறி வாயிலாக ஈடுபட்டு, பின்னும் சிறிது சிறிதாக உலவும் மூச்சு அடங்கும்படி, யோகம் என்னும் மயக்கத்தையுற்று,
துன்பத்தைத்தரும் பலவிதமான குற்றங்களைக்கொண்ட நூல்களைப் படித்தும், அதன்படி செயல் புரிந்தும், பின் அவற்றையும் விட்டுவிட்டு, இவ்வாறு இளைப்புற்றுச் செல்லும் தகாத வழிகள் நன்மையைத் தராது என்று உணர்ந்து,
இந்த வழிதான் எனக்குத் தகுந்தது என்கின்ற இழிவான கொள்கையை விடுத்து, துன்பங்கள் யாவற்றையும் ஓட்டி விலக்கி, இப்படிப்பட்டது என்று வாய்விட்டு விளக்கமுடியாத பேரின்ப வாழ்க்கையை உன் திருவருளினால் பெறமுடியாதா!
இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்.
யோகம்என்னுமருட் கின்னமுடைப் பன்னவை கற்று =
யோகம் என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று
யோகம் என்ற பெயரில் மயக்கத்தைக் கொண்டு துன்பம் தரும் பலவற்றைக் கற்று.
யோகம் என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று
யோகம் என்ற பெயரில் மயக்கத்தைக் கொண்டு துன்பம் தரும் பலவற்றைக் கற்று.
இது தற்காலத்திற்கு மிகவும் பொருந்தும் எச்சரிக்கையாகும்.
யோகம் என்ற பெயரில் யார் யாரோ ஏதேதோ சொல்கிறார்கள். அவற்றைக் கற்று அதன்படி செய்தால் துன்பமே மிஞ்சும். அருணகிரிநாதர் யோகத்தைப் பற்றி எச்சரிக்கிறார்.
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத் தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
வீட்டிற் புகுதன் மிகவெளிதே விழிநாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
இன்னதெனக் கென்னுமதப் புன்மை =
இன்னது எனக்கு என்னும் மதப் புன்மை
இதுதான் சரியான ஒரே மதம் என்னும் புன்மை
இதுவும் சரியான எச்சரிக்கை.
கொள்கை, தத்துவம், மதம் என்ற பெயரில் (போர்வையில் ) யார் யாரோ எதை எதையோ சொல்லித் திரிகிறார்கள். நடைமுறையில் எதையும் பின்பற்றாமல், மொழியில் உள்ள திறமையினால் விசித்திரமான விளக்கங்கள் தருகிறார்கள். முக்கியமாக தங்கள் கருத்தை பிறர்மீது திணிக்க முற்படுகிறார்கள். கோஷ்டி சேர்க்கிறார்கள். ஆன்மீக உண்மையை அனுபவத்தில் உணரவேண்டும். அது ஆசார நியமங்களால்= ஒழுங்கான வாழ்க்கை முறையால் வருவது. வெறும் கொள்கைப்பற்றால் உண்மையை உணர முடியாது. ஒவ்வொரு மதத்தினரும், அதற்குள் ஒவ்வொரு பிரிவினரும் தம்தம் கொள்கைதான் சரியானது என்று வாதுசெய்கிறார்கள். மாணிக்கவாசக ஸ்வாமிகள் சொல்கிறார்:
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் மதங்களில்
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆர்த்து
உலோகாய தனெனும் ஒண் திறற்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
[போற்றித் திருவகவல் ]
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் மதங்களில்
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆர்த்து
உலோகாய தனெனும் ஒண் திறற்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
[போற்றித் திருவகவல் ]
எத்தனை விதமான கொள்கைகள், குழப்பங்கள் ! நாஸ்திகம், உலோகாயதம், மாயாவாதம், கர்மவாதம் என்று இப்படிப் பல மதங்கள் ! இது தவிர, சைவம், வைணவம் என்று வேறு! அவற்றிற்குள்ளும் பற்பல பிரிவுகள். இன்று மீடியாவின் ஆதிக்கத்தால் இத்தகைய குழப்பங்களும் கூச்சலும் மிகுதியாகிவிட்டதாகவே தோன்றுகிறது ! இவையெல்லாம் மாயையின் செயல்கள்!
இத்தகைய குறுகிய கொள்கை வெறியை "புன்மை" என்கிறார் அருணகிரிநாதர். இத்தகைய கொள்கைகளில் ஈடுபடுவதை விட்டு நாம் தூய பக்திவழியைப் பற்ற வேண்டும். இதுவே அருணகிரிநாதரின் தலையாய உபதேசம்.
No comments:
Post a Comment