Wednesday, 25 January 2017

41.திருப்புகழ் 39.திருவிற்குடி


41.திருப்புகழ் 39.திருவிற்குடி


Thanks for the picture.

திருவிற்குடி அருணகிரிநாதர்  தரிசித்த 38வது தலம். இது அட்டவீரட்டத்தலம்  என்று புகழ்பெற்ற எட்டுத் தலங்களில் ஒன்று. இங்கு சிவபெருமான் ஜலந்தராசுரனை சம்ஹரித்தார். ஸ்வாமி பெயர் வீரட்டானேஶ்வரர். அம்பாள் பெயர் பரிமள நாயகி, ஏலவார்குழலி.

இது சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.


 வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.  
 விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே
(2ம் திருமுறை)
இங்கு வந்த அருணகிரிநாதர்  பெண்கள் மயக்கில் விழுந்து, யானை குழியில் விழுந்ததுபோல்  வருந்தாமல் இருக்கவேண்டும் என வேண்டுகிறார். எளிய பாடல்.
தத்த னத்தனத னத்த னத்தனன
     தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
          தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென         சங்குபேரி

சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்
     நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி
          சக்கு முக்கிவிட கட்க துட்டசுர             ரங்கமாள
வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
     ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு
          வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண         முண்டவேலா

வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
     யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
          விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ்        தம்பிரானே.
குழி யுற்ற அத்தியென    மங்குவேனோ
[ சித்திரத்திலும் எனத் தொடங்கும் பாடல். இங்கு 3 வரிகள் விடப்பட்டுள்ளன.]
தத்த னத்தனத....டுக்குடுக்கு என்று பலவாறு சங்கு, முரசு ஆகிய வாத்யங்கள் ஒலியெழுப்ப,
கடலும்  அஷ்ட திக்குகளிலும்  உள்ள   சிறந்த  கிரிகளும்  நிலைகுலைய,  மேக இடியைக்கேட்டு ஆதிசேஷனது  முடிகளும் கண்களும் துன்பம் அடைய,  வாள் ஏந்திய துஷ்ட அசுரர்களின் உடல் அழிந்துபட,
ஜயம் கொண்ட ஓளிமிக்க வேலாயுதத்தை  வீசி, தேவர்கள்  தலைமையிடத்தை அடையும்படி செய்து, யானை ஐராவதம்  வளர்த்த  கிளியாம் தேவ சேனையை மணம் புரிந்த வேலனே !
ப்ரம்மா வெட்கப்படும்படி அவனைப் பிடித்து , அவனது குடுமித்தலையை அலைவித்து, அவனைச் சிறையிலிட்டு, ஜீவன்முக்தர்களான பெரியோர்கள் புகழும்  திருவிற்குடியில் ஆசை கொண்டு மகிழும் தம்பிரானே !
குழியில் விழுந்த  யானை போல நான் மங்கலாமா !

[தத்த னத்தனத--- டுக்கு டுக்கு போன்ற வரிகளைப் பாடும்போது, ஸ்ரீ க்ருபானந்த வாரியார் அந்தந்த வாத்யங்களின் ஒலியை பாட்டிலேயே கொண்டுவந்து விடுவார் !] 

www.dailymail.com.uk






No comments:

Post a Comment